கோலாலம்பூர், அக்டோபர்.14-
மலேசியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை, கடந்த 2024ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில் சுமார் 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை, சுமார் 28.2 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ளனர்.
இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் பதிவான 24.7 மில்லியன் வருகைகளைக் காட்டிலும், 14.5 சதவீதம் அதிகமாகும்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில், இந்தியா, சீனா மற்றும் சிங்கப்பூர் நாடுகளிலிருந்து வந்த பயணிகள், பெரும்பான்மையாகக் காணப்பட்டனர் என்று நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








