அண்மையில் சுற்றுலா அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற gala விருந்து நிகழ்வில் மதுபானம் உபசரிக்கப்பட்ட விவகாரம், பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து இது போன்ற சம்பவம் இனி நிகழாமல் இருப்பதற்கு இந்நிகழ்வு, பெரும் படிப்பினை உணர்த்தியிருப்பதாக அந்த அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தினால் பொது மக்கள் மத்தியில் எழுந்த மாறுப்பட்ட கருத்துகள் மற்றும் சர்ச்சைக்கு அமைச்சு தார்மீக பொறுப்பேற்பதாக அது குறிப்பிட்டுள்ளது. அதேவேளையில் இவ்விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கிய அறிவுறுத்தலை அமைச்சு திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்கிறது.
இனி நடைபெறக்கூடிய ஒவ்வொரு நிகழ்ச்சியும் அரசின் வழிகாட்டலை கருத்தில் கொள்ளப்படும் என்று சுற்றலா, கலை, பண்பாட்டு அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








