Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பாபா ஞோஞா சமூகத்தினர் பிறப்புப் பத்திரத்தில் இன அடையாளத்தை பதிவு செய்யலாம்
தற்போதைய செய்திகள்

பாபா ஞோஞா சமூகத்தினர் பிறப்புப் பத்திரத்தில் இன அடையாளத்தை பதிவு செய்யலாம்

Share:

மலாக்கா, அக்டோபர்.11-

மலாக்கா மாநிலத்தில் மூன்று பெரானாக்கான் குழுக்களில் ஒன்றான பாபா ஞோஞா சமூகத்தினர், இனி பிறப்புப் பத்திரங்களில் தங்களின் வம்சாவளியினரைக் குறிக்கும் இன அடையாளத்தைப் பதிவு கொள்ள முடியும்.

மலேசியாவில் பிற பகுதிகளில் உள்ள மலாக்காவைப் பூர்வீகமாக கொண்ட பெரானாக்கான் சீனர்களுக்கும் இது பொருந்தும். வரும் ஜனவரி முதல் பாபா ஞோஞா சமூகத்தினர் வம்சாவளியைக் குறிக்கும் இன அடையாளத்தைத் தங்களின் அடையாள அட்டைகளிலும் திருத்திக் கொள்ளலாம் என்று மலாக்கா பாபா ஞோஞா சமூகத் தலைவர் ரொனால்ட் தெரிவித்தார்.

பதிநான்காம் நூற்றாண்டில் சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட வணிகர்கள் மலாக்காவில் உள்ள உள்ளூர் பெண்களை மணந்து கொண்டதன் விளைவாக பாபா ஞோஞா சமூகம் உருவாகியது.

இந்நிலையில் பிறப்புப் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் தங்களின் வம்சாவளியின் இன அடையாளத்தைப் பதிவு செய்து கொள்வதற்கு அனுமதி கிடைப்பதில் முக்கியப் பங்களிப்பு வழங்கிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும், ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமிக்கும் இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ரொனால்ட் கான் தெரிவித்தார்.

Related News