Oct 9, 2026
Thisaigal NewsYouTube

500க்கும் மேற்பட்ட போதைப் பொருள் அடிமைகள் பட்டப்படிப்பு முடித்தவர்கள்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
500க்கும் மேற்பட்ட போதைப் பொருள் அடிமைகள் பட்டப்படிப்பு முடித்தவர்கள்!

பட்டர்வொர்த், ஜூன்.21-

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிறுவனம் - ஏஏடிகே வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 முதல் காலாண்டில் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 559 பேர் இளங்கலை, முதுகலை அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஆவர்.

மேலும், 2,323 பேர் டிப்ளோமா பட்டதாரிகள், இவர்களில் பெரும்பாலானோர் 19 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், செயற்கை அல்லது பாரம்பரிய போதைப்பொருட்களான ஹெரோயின் அல்லது கஞ்சாவைப் பயன்படுத்துபவர்கள் என்றும் உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷாம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.

இளையோர் பிரிவில் 15 முதல் 40 வயதுடைய 65 ஆயிரத்து 264 பேர் போதைப்பொருள் அடிமைகளாக உள்ளனர். இது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் கவலையளிக்கிறது என்றார் அவர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →