Dec 5, 2025
Thisaigal NewsYouTube
குடி​நீர் கட்டண உயர்வு, மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது
தற்போதைய செய்திகள்

குடி​நீர் கட்டண உயர்வு, மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது

Share:

குடி​நீர் கட்டணத்தை உயர்த்துவதற்கான சாத்தியங்கள் ஆராயப்பட்ட போதிலும், குடி​நீர் கட்டணத்தை உயர்த்தும் நிலை ஏற்படுமானால் அது மக்களுக்கு எந்த வகையிலும் சுமையில்லாத அளவிலேயே இருக்கும் என்று இயற்கை வளம், சுற்றுச்​சூழல், பருவநிலை மாற்றம் ​மீதான அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

சில மாநிலங்களில் ஒரு ​நீண்ட காலமாகவே குடி​நீர் கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மக்களின் அடிப்படை தேவையாக குடி​நீரும், மின்சார விநியோகமும் இருந்து வருகிறது. எனவே அதன் கட்டணங்களை உயர்த்தும் யோசனை முன்வைக்கும் போது மக்களின் நலன் சார்ந்த அம்சங்களை முதலில் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று அமைச்சர் நிக் நஸ்மி விளக்கினார்.

Related News