அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் எதிரொலியாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக 100 டாலருக்கும் மேல் உயர்ந்து, உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை, தற்போது 100 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது.
இதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் 13.20 விழுக்காடு சரிந்து 94.85 டாலராகவும், அமெரிக்காவின் W.T.I ( டபிள்யூ.டி.ஐ ) எண்ணெய் 14.58 விழுக்காடு சரிந்து 96.48 டாலராகவும் வர்த்தகமாகிறது.
முக்கிய நீர்வழிப் பாதையான 'ஹார்முஸ்' நீரிணை வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்ததே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
எனினும், இந்த விலை சரிவு தற்காலிகமானதா அல்லது நீடிக்குமா என்பது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நகர்வுகளைப் பொறுத்தே அமையும் என உலகப் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.








