Oct 2, 2026
Thisaigal NewsYouTube

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

சிப்பாங் அனைத்துலக சுற்றுப்பந்தயத் திடலில் இன்று தொடங்கி வரும் அக்டோபர் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 2026 ஃபோர்முலா 1 கல்ஃப் ஏர் பாஹ்ரென் கிராண்ட் பிரீ பந்தயத்தை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு போக்குவரத்து நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும், குறிப்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பிரதான F1 பந்தயத்தை முன்னிட்டு போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.

மேலும், சுற்றுப்பாதைக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் 5 முக்கிய இடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், கேஎல்ஐஏ சுங்கச்சாவடி முதல் ஜாலான் பெகெலிலிங் செல்லும் வழி தொடங்கி, சுற்றுப்பாதைக்குச் செல்லும் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சுற்றுப் பாதைக்குச் செல்லும் வாகனங்களில் நுழைவுச்சீட்டு, வாகன அனுமதிச்சீட்டு மற்றும் அணுகல் ஸ்டிக்கர் ஆகியவை பரிசோதிக்கப்பட்ட பின்னரே பார்வையாளர்கள் பந்தய மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஷாஸெலி கஹார் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து நெரிசலைத் தடுப்பது, ரோந்து பணிகள், சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மற்றும் முக்கியப் பிரமுகர் பாதுகாப்புப் பணிகளுக்காக சிலாங்கூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த 365 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும், பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக 17 வாகன நிறுத்துமிடங்களில் மொத்தம் 9,000 வாகனங்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் ஒரே நேரத்தில் 100 பேருந்துகள் வரை நிறுத்தும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுப் போக்குவரத்து சேவைகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →