ஜோகூர் பாரு, ஜூலை.14-
ஓன்லைன் மூலம் பாலியல் மோசடி, பாலியல் மிரட்டல் முதலிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் எழுவர், நாளை ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர்.
அந்த ஏழு சந்தேகப் பேர்வழிகளுக்கு எதிராக மூன்று விசாரணை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, 32 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
அந்த எழுவரையும், ஜோகூர் பாரு மற்றும் கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டுவதற்குரிய அனுமதி, துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டுள்ளதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.








