May 24, 2026
Thisaigal NewsYouTube
வெப்பத்தாக்குதலுக்கு ஆளாகிய இளைஞர் மரணம்
தற்போதைய செய்திகள்

வெப்பத்தாக்குதலுக்கு ஆளாகிய இளைஞர் மரணம்

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 26-

பகாங், குவந்தான்,புக்கிட் பெலிண்டுங்- பகுதியில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் வெப்பத் தாக்குதலுக்கு ஆளாகி மரணம் அடைந்தார்.

நேற்று காலை 6.40 மணிக்கு அந்த மலையேறத் தொடங்கிய 20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர், பிற்பகலில் சுயநினைவு இழந்த நிலையில் கீழே விழுந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

மிகவும் கவலைக்கிடமாக இருந்த அந்த இளைஞர், குவந்தான், தேங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அந்த இளைஞர், இரவு 9.39 மணியளவில் உயிரிழந்ததாக பகாங் மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் ருஸ்தி அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

Related News