கோலாலம்பூர், செப்டம்பர்.25-
தட்சணாமூர்த்திக்கு இன்று அதிகாலையில் நிறைவேற்றப்படவிருந்த தூக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நம்பிக்கை ஊட்டியப் பின்னர் திடுதிப்பென்று அந்த மலேசிய இளைஞருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை அமல்படுத்தியுள்ள சிங்கப்பூர் சிறைச்சாலையின் சேவையை மனித உரிமை போராட்டவாதி வழக்கறிஞர் என். சுரேந்திரன் கடுமையாகச் சாடினார்.
சிங்கப்பூர் சிறைச்சாலையின் இந்த நடவடிக்கை, கொடூரமானது மற்றும் நாகரீகமற்றது என்று அவர் கூறினார். இது தன்னிச்சையான முறையில் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்குச் சமம் என்று அவர் வர்ணித்தார்.
திட்டமிடப்பட்ட மரண தண்டனையின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் முடிவெடுக்க இத்தகைய சட்டவிரோத மரண தண்டனை முறை நிறுத்தப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் அரசாங்கத்தைத் தாம் கேட்டுக் கொள்வதாக சுரேந்திரன் குறிப்பிட்டார்.








