Dec 19, 2025
Thisaigal NewsYouTube
பையில் அடைக்கப்பட்ட சடலம்: அம்பாங்கில் காணாமல் போன பெண்ணாக இருக்கலாம்
தற்போதைய செய்திகள்

பையில் அடைக்கப்பட்ட சடலம்: அம்பாங்கில் காணாமல் போன பெண்ணாக இருக்கலாம்

Share:

சிரம்பான், டிசம்பர்.19-

சிரம்பான் அருகே உள்ள பெடாஸ் (Pedas) பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் பையில் அடைக்கப்பட்ட நிலையில் நேற்று கண்டெடுக்கப்பட்ட சடலமானது, சிலாங்கூர் அம்பாங்கில் காணாமல் போன பெண்ணாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி அம்பாங் போலீஸ் நிலையத்தில், அப்பெண் காணாமல் போனது குறித்த புகார் பதிவாகியுள்ளதாக நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

அப்புகாரினையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்குப் பின்னர், ஜாலான் பெடாஸ்-லிங்கியிலுள்ளஒரு வீட்டில் தேடும்படி, பெடாஸ் போலீஸ் நிலையத்திற்கு உத்தரவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வீட்டின் பின்புறம் பை ஒன்றில் அடைக்கப்பட்ட நிலையில், அப்பெண்ணின் சடலமானது புதைக்கப்பட்டிருந்தது.

இன்று வெள்ளிக்கிழமை, ரெம்பாவ் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், அப்பெண்ணின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்றும் அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.

Related News