Oct 17, 2026
Thisaigal NewsYouTube

போலீஸ் கண்காணிப்பில் அந்த நபர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போலீஸ் கண்காணிப்பில் அந்த நபர்

பினாங்கு, நவ.7-

தனது காதலை நிராகரித்து விட்டார் என்பதற்காக ஒரு பெண்ணையும், அவரின் தந்தையையும் கத்தியால் குத்தி கொலை செய்ததாக நம்ப்படும் ஆடவர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் அதேவேளையில் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ Hamzah Ahmad தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் பினாங்கு ஆயர் ஹீத்தாம், Lengkok Angsana-வில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 30 வயது பெண்ணையும், அவரின் 62 வயது தந்தையையும் கத்தியால் குத்தி கொலை செய்தப் பின்னர் அந்த நபர் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருவதாக டத்தோ Hamzah Ahmad தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →