Jul 2, 2026
Thisaigal NewsYouTube
நபிகள் நாயகத்தின் நண்பர்கள் குறித்து பாசிர் பூத்தே எம்.பி வெளியிட்ட கருத்துக்கு அமைச்சரவை கடும் கண்டனம்
தற்போதைய செய்திகள்

நபிகள் நாயகத்தின் நண்பர்கள் குறித்து பாசிர் பூத்தே எம்.பி வெளியிட்ட கருத்துக்கு அமைச்சரவை கடும் கண்டனம்

Share:

பாசிர் பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் நிக் முகம்மது ஜவாவி சாலே, முகம்மது நபிகள் நாயகத்தின் தோழர்களை அவமதிக்கும் வகையிலான கருத்துக்கு அமைச்சரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த மே 31-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்துக் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், அந்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அமைச்சர்கள் ஒருமனதாக கண்டித்ததாகவும் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ பாஹ்மி பாட்சில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோல திரங்கானுவில் நடைபெற்ற ஓர் அரசியல் பிரச்சாரக் கூட்டத்தின் போது, நபிகள் நாயகத்தின் தோழர்களை ‘பாப்பா செட்டி’ மற்றும் 'காக்கி ஜினா' ஆகிய சொற்களுடன் தொடர்புபடுத்திப் பேசிய தனது சர்ச்சைக்குரிய கருத்திற்காக, முகம்மது ஜவாவி மன்னிப்புக் கோரினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பல்வேறு போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டது என்றும் பாஹ்மி பாட்சில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு