Aug 7, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை சிப்புட்டில் காட்டு யானைகள் அட்டகாசம் - ஒருவர் காயம்
தற்போதைய செய்திகள்

சுங்கை சிப்புட்டில் காட்டு யானைகள் அட்டகாசம் - ஒருவர் காயம்

Share:

சுங்கை சிப்புட், ஜூலை.19-

பேராக் மாநிலம், சுங்கை சிப்புட் அருகே உள்ள கம்போங் ஓராங் அஸ்லி பெருக பகுதியில், கிராமத்துக்குள் புகுந்த யானைக் கூட்டத்தை விரட்ட முயன்ற ஒருவர் யானைத் தாக்குதலில் காயமடைந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவத்தில், நான்கு யானைகள் வீடுகளின் பின்புறம் புகுந்து மரவள்ளிக்கிழங்கு மற்றும் வாழை பயிர்களைச் சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், யானைகளை விரட்ட முயன்ற போது அருகில் சென்ற அந்த நபரை யானை ஒன்று தாக்கியது.

இதில் காயமடைந்து மயங்கிய அவரை மீட்ட அப்பகுதி மக்கள், Raja Permaisuri Bainun மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தற்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி