Mar 14, 2026
Thisaigal NewsYouTube
கிளாந்தான், சிலாங்கூரில் குறைந்தது; திரங்கானு, பேராவில் மாற்றம் இல்லை !
தற்போதைய செய்திகள்

கிளாந்தான், சிலாங்கூரில் குறைந்தது; திரங்கானு, பேராவில் மாற்றம் இல்லை !

Share:

சிலாங்கூரிலும் கிளாந்தானிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிகத் துய்யர் துடைப்பு மையங்களில் தங்கி இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே சமயம், பேரா, திரங்கானு ஆகிய மாநிலங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை.

இன்று காலை நிலவரப்படி, கிளாந்தானில் தற்போது 1,592 குடும்பங்களைச் சேர்ந்த 5,087 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.

சிலாங்கூரில், 5 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அதே சமயம், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, சுங்ஙாய் லாங்ஙாட் இல் நீர் மட்டம் 3.3 மீட்டர் ஆகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் அபாய அளவிலேயே இருப்பதாக பப்லிக் இன்ஃபோ பஞ்ஞீர் இணையப்பக்கம் தெரிவித்துள்ளது.

திரங்கானுவில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 158 பேர் 4 துயர் துடைப்பு மையங்களுக்குத் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பேரா மாநிலத்தில், 18 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் தெலுக் இந்தானில் உள்ள ஒரு துயர் துடைப்பு மையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். சங்காட் ஜோங்-இல் உள்ள சுங்கை பீடோரில் நீர் மட்டம் 3.72 மீட்டர் ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது இன்று மாலையும் இரவும் இப்பகுதியில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

Related News