Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மீண்டும் செயல்படத் தொடங்கியது
தற்போதைய செய்திகள்

மீண்டும் செயல்படத் தொடங்கியது

Share:

கோலாலம்பூர், மிட் வேலி சிட்டி பேரங்காடியில் உள்ள தெனாகா நேஷனல் பெர்காட் மின் துணை நிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்ததன் விளைவாக, நேற்று தற்காலிகமாக மூடப்பட்ட அப்போரங்காடி, இன்று காலை முதல் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது.

நேற்று காலை 10 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், அப்பேரங்காடியில் உள்ள திஎன்பி துணை மின் நிலையத்திலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறிய வேளையில், அது குறித்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 40 வீரர்களுடன் தீயை அணைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றன.

அந்த திஎன்பி இன் துணை மின்நிலையத்தில் உள்ள கேபல் கூலிங் ஆய்ல் அதிக வெப்பமடைந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News