Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மூன்று மலேசியப் பெண்மணிகளுக்கு ( ஃபோர்ப்ஸ் விருது
தற்போதைய செய்திகள்

மூன்று மலேசியப் பெண்மணிகளுக்கு ( ஃபோர்ப்ஸ் விருது

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.17
அமெரிக்காவின் பிரபல Forbes ( ஃபோர்ப்ஸ் ) சஞ்சிகை , 2024 ஆண்டிற்கான ஆசிய பசிப்பிகைச் சேர்ந்த 50 வயதை கடந்த, சக்தி வாய்ந்த 50 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் மலேசியாவைச் சேர்ந்த மனித உரிமை போராட்டவாதி அம்பிகா ஸ்ரீனிவாசன் உட்பட மூவர் இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவை தளமாக கொண்ட ஃபோர்ப்ஸ் சஞ்சிகை, ஒவ்வொரு ஆண்டும் உலகில் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் பிறந்துள்ள 2024 ஆம் ஆண்டுக்கான பட்டியலை அது வெளியிட்டுள்ளது. . அதில் மலேசியாவைச் சேர்ந்த மூன்று பெண்கள் .இடம் பெற்றுள்ளனர்.

ஆசிய பசிபிப் நிர்வாக இயக்குநர் 65 வயது ரெபேக்கா ஃபாத்திமா ஸ்தா மரியா ,வழக்கறிஞரும், சமூகப் போராட்டவாதியமான 67 வயது அம்பிகா ஸ்ரீனிவாசன் மற்றும் திரைப்பட இயக்குநர் 57 வயது துன்கு மோனா ரிசா காலிட் ஆகிய மூன்று மலேசியப் பெண்மணிகள் அந்த சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

காந்தி ஞாபகர்த்த அறங்காப்பு பொதுச்சேவை விருது உட்பட உலகளாவிய நிலையில் பல்வேறு அனைத்துலக விருதுகளை வெற்றுள்ள மலேசியாவின் பிரபல வழக்கறிஞர் அம்பிகா ஸ்ரீனிவாசன், ஒரு முன்னுதாரணப் பெண்மணியாக மனித உரிமைக்காக தொடர்ந்து போராடி வருவதை கருத்தில் கொண்டு இவ்விருது வழங்கப்படுவதாக Forbes ( ஃபோர்ப்ஸ் ) சஞ்சிகை தெரிவித்துள்ளது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்