Dec 3, 2025
Thisaigal NewsYouTube
விமான நிலையத்தில் அமைச்சர் ரகலையா? அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை
தற்போதைய செய்திகள்

விமான நிலையத்தில் அமைச்சர் ரகலையா? அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை

Share:

சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நியைத்தில் கெ.எல்.ஐ.ஏ. 1 இல் அமைச்சர் ஒருவர் பெரும் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு அறிக்கையையும் தாம் பெறவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
நேற்று நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பில் மலேசியா ஏர்போட் ஹொல்டிங்ஸ் பெர்காட் விசாரணை மேற்கொள்ளும் என்று தாம் நம்புவதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார். மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தாக நம்பப்படும் சீன நாட்டுப் பெண் ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போது, அவரை தற்காப்பதற்காக அமைச்சர் ஒருவர், நடப்பு விதிமுறைகளை மீறி விமான நிலையத்தின் அனைத்துலகப் பயணிகள் வருகை புரியும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து ரகளையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் பயணிகள் வருகையாளர் பகுதிக்கு செல்வதற்கு எந்தவொரு அனுமதி அட்டையையும் பெறாமல் தான் தோன்றித்தனமாக அந்த அமைச்சர் பாதுகாப்பு வளையதிற்கு உட்பட்ட அந்தப்பகுதியில் நுழைந்து விட்டதாக கூறப்படுகிறது.
எனினும் பாதுகாப்பு விஷயங்களில் யாராக இருந்தாலும் நடப்பு விதிமுறைகளை பின்பற்றியாக வேண்டும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார.

Related News