பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவிக்க மிரட்டல் அல்லது கையூட்டு போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பல பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்து வந்ததைத் தொடர்ந்து, இன்று ஜெலி நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாரி கெச்சிக் உம் மறுத்துள்ளார்.
அரசியல் சார்ந்த இடைத்தரகர்கள் யாரும் ஈடுபடுத்தப்படவில்லை எனவும், ஜெலியின் மக்களின் நலனுக்காகவே அந்த ஆதரவு தெரிவிக்கப்பட்டது எனவும் ஜஹாரி கூறினார்.
எந்த தரப்பினராலும் மிரட்டப்படாமலும் கையூட்டு வாங்காமலும் தாம் தனது சொந்த சிந்தனையில் இந்த முடிவை எடுத்ததாக அவர் சொன்னார். ஆனால் அந்த அறிவிப்புக்குப் பிறகு, தன் மீது பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
தம்மை நம்பிய வாக்காளர்காக தாம் எந்த எதிர்ப்பையும் சந்திக்கத் தயார் எனக் கூறும் ஜஹாரி, தன் மீது தவறானக் குற்றச்சாட்டை வைப்பவர்களை நீதிமன்றத்தில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.








