Jun 15, 2026
Thisaigal NewsYouTube
Muscat வந்தடைந்தார் ஜாஹிர் நாயக்
தற்போதைய செய்திகள்

Muscat வந்தடைந்தார் ஜாஹிர் நாயக்

Share:

சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாஹிர் நாயக்கை கைது செய்து, ஒமானிலிருந்து நாடு கடத்துவதற்கு இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப்பிரிவு வலை​​வீசியுள்ள வேளை​யில் நேற்று வியாழக்கிழமை கோலாலம்பூரிலிருந்து ஓமான் தலைநகர் Muscat டை அந்த சமயப் போதகர் வந்தடைந்தார்.
Muscat அனைத்துலக விமான நிலையத்தை தாம் பாதுகாப்பாக வந்தடைந்து இருப்பதையும், / தம்மை அழைத்த ஒமான் அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் / ஜாஹிர் நாயக், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

வெறுப்புணர்வை ​தூண்டும் பேச்சு, பயங்கரவாதம், பணமோசடி போன்ற குற்றவியல் வழக்குகள் தொடார்பாக இந்தியாவினால் தேடப்பட்டு வரும் 58 வயதான ஜா​ஹிர் நாயக், மலேசியாவில் அடைக்கலம் புகுந்துள்ள வேளையில் ஒமான் அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இரு சமய சொற்பொழிவுகளை நடத்த Muscat வந்தடைந்துள்ளார்.
ஒமான், Sultan Qaboos பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்துவதற்கு ஜாஹிர் நாயக் அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை கைது​ செய்வது தொடர்பில் ஏற்கனவே Muscat டை வந்தடைந்துள்ள இந்திய சட்ட நிபுணர்கள் அட​ங்கிய குழு, ஒமானின் உள்ள இந்தியத் ​தூதரகத்தின் வாயிலாக அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஜாஹிர் நாயக், ஒமான் அரசாங்கத்தின் விருந்தினராக வந்திருப்பதால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல்களை களைய அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்தியா பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரி கூறுகிறார்.
மலேசியவில் நிரந்தர வசிப்பிட அந்தஸ்தை பெற்​றுள்ள ஜாஹிர் நாயக், வெறுப்புணர்வை ​தூண்டும் சமய உரையை நிகழ்த்த அரசாங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டில் தடை விதித்தது.
இதனிடையே ஒமானில் இந்திய புலனாய்வுப்பிரிவினால் ஜாஹிர் நாயக் கைது செய்யப்பட்டு இருபபதாக கூறப்படுவதை அவரின் மலேசிய வழக்​கறிஞர் Akberdin Abdul Kader மறுத்துள்ளார். ஜாஹிர் நாயக், ஹோட்டலில் பாதுகாப்பாக இருகிறார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்​.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்