Dec 3, 2025
Thisaigal NewsYouTube
2023 ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு, டிசம்பரில் நடைபெறும்
தற்போதைய செய்திகள்

2023 ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு, டிசம்பரில் நடைபெறும்

Share:

2023 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு, முன்புபோல், ஆண்டு இறுதி மாதமான டிசம்பரில் நடத்துவதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளது. இவ்வாண்டிற்கான எஸ்.பி.எம் தேர்வு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு, இவ்வாண்டு ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கி, மார்ச் மாதம் 15 ஆம் தேதி நடைபெற்றது. இவ்வாண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு டிசம்பர் மாதம் தொடங்குகிறது.

டிசம்பர் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை அறிவியல் நடைமுறை தேர்வு நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News