May 21, 2026
Thisaigal NewsYouTube
அம்னோ உச்சமன்ற சந்திப்புக் கூட்டத்திற்கு வர மாட்டேன்
தற்போதைய செய்திகள்

அம்னோ உச்சமன்ற சந்திப்புக் கூட்டத்திற்கு வர மாட்டேன்

Share:

இன்று நடக்கும் அம்னோ உச்சமன்றக் கூச்சத்திற்குத் தாம் வரப் போவதில்லை என அதன் உறுப்பினர் இஷாம் ஜாலில் சந்திப்புக் கூட்டத்திற்கு வந்து தமது கருத்துகளையும் அதிருப்தியையும் தெரிவிக்குமாறு அக்கட்சியின் தலைவர் டத்டோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சஹிட் ஹமிடி அழைத்திருந்தும் தாம் வரப்போவதில்லை எனத் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதாக இஷாம் ஜாலில் கூறினார்.

அம்னோ டிஏபி-உடனான ஒத்துழைப்பைத் தொடரும் வரையில் இந்த எதிர்ப்பு தொடரும் என இஷாம் குறிப்பிட்டார்.

அம்னோ உச்சமன்றத்தில்தம் இரண்டாவது தவணையாக அங்கம் வகித்து வருவதாகக் கூறும் இஷாம், சந்திப்புக் கூட்டத்தில் ஸாஹிட் என்ன செய்வார் எனத் தமக்கு நன்று தெரியும் என இஷாம் குறிப்பிட்டார்.

அவரது எண்ணம்போல் தாம் ஏன் நடக்க வேண்டும் எனக் கேட்ட இஷாம்,
15வது பொதுத் தேர்தலுக்கு பிறகு டிஏபியுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற ஸாஹிட்டின் முடிவின் காரணமாக, அதிகமான மலாய்க்காரர்கள் இப்போது அம்னோவை நிராகரித்து வருகின்றனர் என்ற உண்மையை அவர் உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இஷாம் கூறினார்.

இந்த முடிவால் இன்னும் சில ஆண்டுகளில் அம்னோ சிதைந்து விடும் எனவும் சிஹாம் சொன்னார்.

Related News