Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ஆடவருக்கு 42 ஆண்டு சிறைத்தண்டனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆடவருக்கு  42 ஆண்டு சிறைத்தண்டனை

திரெங்கானு, செப்டம்பர் 08-

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது மைத்துனியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக புல் வெட்டுத் தொழிலாளி ஒருவருக்கு கோலத்திராங்கானு, செஷன்ஸ் நீதிமன்றம் , 42 ஆண்டு சிறையும், 30 பிரம்படித் தண்டனையும் இன்று விதித்தது .

இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான 39 வயதுடைய நபர் கடந்த 2021 ஆம் ஆண்டில் மாரங் -கில் உள்ள ஒரு வீட்டில் 12 வயது சிறுமியான தனது மைத்துனியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது .

நம்பிக்கையின் அடிப்படையில் தனது பராமரிப்பில் விடப்பட்ட அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்த அந்த நபரின் செயலை நீதிமன்றம் கடுமையாக கருதுவதாக நீதிபதி நோரிஹ் ஒஸ்மன் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →