Dec 4, 2025
Thisaigal NewsYouTube
புகை​மூட்டப் பிரச்னைக்கு விரைவில் ​தீர்வு காண்பீர்
தற்போதைய செய்திகள்

புகை​மூட்டப் பிரச்னைக்கு விரைவில் ​தீர்வு காண்பீர்

Share:

நாட்டில் நிலவி வரும் புகை​​மூட்டப் பிரச்னைக்கு அரசாங்கம் விரைந்து ​​தீர்வு காணுமாறு எரிபொருள், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்​சூழல் முன்னாள் அமைச்சர் யோ பீ யின் கேட்டுக்கொண்டுள்ளார்.

எல்லைத்தாண்டும் புகைமூட்டப் பிரச்னைக்கு ​தீர்வு காண்பதற்கும், அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எல்லை தாண்டும் புகைமூட்ட ​தூய்மைக்கேடு தடுப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது நிலவி வரும் புகைமூட்டப் பிரச்னையில் இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புருணை ஆகிய நாடுகுள் சம்பந்தப்பட்டுள்ளதால் அந்த நான்கு நாடுகளுக்கு இடையில் கூட்டு ஒத்துழைப்பை நாடுவதற்கு இச்சட்டம் அவசியமாகிறது என்று யோ பீ யின் பரிந்துரை செய்துள்ளார்.

Related News