Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இளம் எழுத்தாளர் கிருஷ் ஹரன் நாயர்
தற்போதைய செய்திகள்

இளம் எழுத்தாளர் கிருஷ் ஹரன் நாயர்

Share:

எழுத்துலகில் புதிய வரவாக பார்க்கப்படுகிறார் இளம் எழுத்தாளர் கிருஷ் ஹரன் நாயர். ஓர் எழுத்தாளராக வர வேண்டும் என்ற வேட்கையில் பத்து வயதிலேயே இரண்டு நூல்களை எழுதி சாதனைப் படைத்துள்ளார் கிருஷ் ஹரன்.

குழந்தைப் பருவதிலேயே கிருஷ் ஹரன் னிடம் காணப்பட்ட வளமிகுந்த சிந்தனா சக்தி, அவரின் பெற்றோரை வியக்கவைத்துள்ளது.தனது அபார கற்பனை வளத்தினால் Mysterious War in the Deep மற்றும் Pillar And The Golden Sword எனும் இரு நூல்களை எழுதுவதற்கு கிருஷ் ஹரன் க்கு தூண்டுதலாக அமைந்துள்ளது.

Sunway International Iskandar Johor மாணவியான கிருஷ் ஹரன் சிறு வயதிலிருந்து படிப்பதிலும், எழுதுவதிலும் அதிக ஆர்வமுடையவாக காணப்பட்டார். அதிலும் பத்திரிகைகளை புரட்டிப்பார்ப்பதில் கிருஷ் ஹரன் க்கு இருந்த ஆர்வம், இன்று முன்னணி சிறார் எழுத்தளாராக அவரை அடையாளப்படுத்தியுள்ளது.

தமது இரண்டு நூலின் வாயிலாக கிடைக்கக்கூடிய ஒவ்வொரு காசும்,உதவித் தேவைப்படக்கூடியவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதில் இந்த இளம் எழுத்தாளர் உறுதியாக இருந்து வருகிறார்.

தமது பள்ளி வாழ்க்கையில் மத்தியிலும் கிருஷ் ஹரன் தற்போது மூன்றாவது நூலை எழுதி வருகிறார். முதல் நூல் விற்பனையில் கிடைத்த 7 ஆயிரம் வெள்ளியையும் Yayasan Sinar Ilmu Jaya அறிவாரியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் ராமகிருஷ்ணன் மற்றும் ஜெயந்தி மர்லின் தம்பதியரின் புதல்வியான கிருஷ் ஹரன்.

Related News