Jul 1, 2026
Thisaigal NewsYouTube
கே.எல்.ஐ.ஏ பயணப் பெட்டி கையாளும் முறை பாதிப்பு - போக்குவரத்து அமைச்சு அறிக்கை
தற்போதைய செய்திகள்

கே.எல்.ஐ.ஏ பயணப் பெட்டி கையாளும் முறை பாதிப்பு - போக்குவரத்து அமைச்சு அறிக்கை

Share:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதல் முனையத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி ஏற்பட்ட பயணப் பெட்டி கையாளும் முறை பாதிப்பு குறித்து, போக்குவரத்து அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜனா சாந்திரன் முனியன் தலைமையில் இன்று அவசர ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

மின் அழுத்தக் குறைவு காரணமாக பயணப் பெட்டி கட்டுப்பாட்டு அமைப்பு செயலிழந்ததே இந்தப் பாதிப்பிற்கு மூலக்காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் சுமார் ஆயிரத்து 61 பயணப் பெட்டிகள் விமானத்தில் ஏற்றப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், விமானப் பயண அட்டவணையில் எந்த மாற்றமும் இன்றி விமானங்கள் வழக்கம் போல் இயங்கியதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது பாதிக்கப்பட்ட பெரும்பாலான பயணப் பெட்டிகள் பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வரும் வேளையில், இந்தச் சம்பவம் குறித்து வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி அமைச்சரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

விமான நிலையத்தின் பயணப் பெட்டி கையாளும் கட்டமைப்பை முழுமையாகச் சீரமைக்கவும், இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யவும் மலேசிய விமான நிலையங்கள் கழகத்திற்கு போக்குவரத்து அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

Related News

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

2018 முதல் தொடரும் களப்பணி; ஸ்கூடாய் மக்களின் பேராதரவோடு களம் காணும் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி

2018 முதல் தொடரும் களப்பணி; ஸ்கூடாய் மக்களின் பேராதரவோடு களம் காணும் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி