Oct 19, 2026
Thisaigal NewsYouTube

பாலஸ்தீன அகதிகள் பிள்ளைகளுக்கு மலேசியாவில் கல்வி வாய்ப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாலஸ்தீன அகதிகள் பிள்ளைகளுக்கு மலேசியாவில் கல்வி வாய்ப்பு

குளாய்,ஆகஸ்ட் 09-

GAZA- வில் உள்ள பாலஸ்தீன அகதிகள் பிள்ளைகள், தங்கள் கல்வியை மலேசியாவில் தொடர்வதற்கு அவர்களை இங்கு கொண்டு வருவதற்கு MYCARE எனும் மலேசிய மனிதாபிமான அமைப்பும், இதர அரசாங்க சார்பற்ற அமைப்புகளும் திட்டமிட்டுள்ளன.

16 வயதுக்கு மேற்பட்ட பள்ளிப்பிள்ளைகள் மற்றும் பல்லைக்கழக மாணவர்களுக்கு முதலில் முன்னுரிமை வழங்கப்படும். இது தொர்பாக உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காதிர் - ருடன் இன்னும் இரண்டு வாரத்தில் பேச்சு நடத்தப்படும் என்று MYCARE தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் கமல் நஷாருடின் முஸ்தபா அறிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சர்ஃபத்லினா சிடெக்- கையும் தாங்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

முதல் கட்டமாக 100 பாலஸ்தீன மாணவகள் கொண்டு வரப்படுவர். 16,17 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் மட்டுமே பெற்றோர்கள் துணையின்றி வெளிநாடுகளில் கல்வி பயில்வதற்கு அனுப்பப்படும் நிலை இருப்பதால் முதலில் 100 மாணவர்கள் கொண்டு வரப்படுவர் என்று அவர் விவரித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மூண்ட போரினால் தங்கள் கல்வியை தொடர முடியாமல் போன காஸாவில் உள்ள பாலஸ்தீன அகதிகளின் பிள்ளைகளுக்கு உதவும் நோக்கில் இந்த பெரும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் கமல் நஷாருடின் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: மலாக்கா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் – வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

புகைமூட்டம்: மலாக்கா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் – வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

விரைவுப் பேருந்து பயணச்சீட்டு விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு – அபாட் முடிவுக்கு எதிர்ப்பு

விரைவுப் பேருந்து பயணச்சீட்டு விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு – அபாட் முடிவுக்கு எதிர்ப்பு

பொருளாதாரச் சீர்திருத்தம் பலன் தருகிறது – அடுத்த 3 ஆண்டுகளில் மக்கள் வாழ்வு மேம்படும்: பிரதமர் அன்வார்

பொருளாதாரச் சீர்திருத்தம் பலன் தருகிறது – அடுத்த 3 ஆண்டுகளில் மக்கள் வாழ்வு மேம்படும்: பிரதமர் அன்வார்

ஊழல், நிதிக் குற்றங்களை ஒழிக்க மொரீஷியஸ் அமைப்புடன் எஸ்பிஆர்எம் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது

ஊழல், நிதிக் குற்றங்களை ஒழிக்க மொரீஷியஸ் அமைப்புடன் எஸ்பிஆர்எம் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது

பினாங்கில் மரம் விழுந்து 3 வீடுகள் சேதம்

பினாங்கில் மரம் விழுந்து 3 வீடுகள் சேதம்

போலீஸ் தடுப்புக் காவல் மரணம்: சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் – ராயர்  வலியுறுத்தல்

போலீஸ் தடுப்புக் காவல் மரணம்: சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் – ராயர் வலியுறுத்தல்