பாஸ் கட்சியின் வருகையால் , பினாங்கு மாநிலத்தில் புத்தர் மற்றும் சீன கோவில்கள் உடைக்கப்படும் என மதம் மற்றும் இனம் தொட்டு லிம் குவான் என் பேசியதால் அவர் மீது போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் முகமட் அக்மால் சாலே தனது முகநூல் பக்கத்தின் வழி தெரிவித்துள்ளார்.
ஒரு சீன பத்திரிக்கை வெளியிட்டுள்ள அந்தக் கூற்று சித்தரிக்கப்பட்டவை என லிம் குவான் எங் நேற்று அறிக்கை விட்டிருந்த போதிலும், அவர் மீது போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிர்கட்சியாக இருந்தாலும் நடப்பு அரசாங்கத்தின் கட்சியாக இருந்தாலும், மதம் இனம் , அரசு தொடர்பாக யாரும் தொட்டு இனி பேசக்கூடாது என்பதால் இந்த போலீஸ் விசாரணை மிக அவசியம் என அவர் கூறியுள்ளார்.








