Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மரண விசாரணை உள்ளடக்கம் கசிந்ததா? போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

மரண விசாரணை உள்ளடக்கம் கசிந்ததா? போலீஸ் விசாரணை

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.20-

சபாவைச் சேர்ந்த முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீரின் மரண விசாரணையில் நீதிமன்றத்தில் ஒரு சிறார் அளித்த சாட்சியம் ஓன்லைனில் கசிந்துள்ளது என்று கூறப்படுவது தொடர்பில் போலீசார் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளனர்.

சிறார் அளித்த சாட்சியம் எவ்வாறு ஓன்லைனில் கசிந்தது என்பது குறித்து தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக கோத்தா கினபாலு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி காசிம் மூடா தெரிவித்தார்.

இது தொடர்பாக லுயாங் மாவட்ட போலீஸ் நிலையத்தில் வழக்கறிஞர் ராம் சிங் அளித்த போலீஸ் புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கியிருப்பதாக அந்த உயர் போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

Related News