Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கூட்டரசு சின்னத்தை கெடா பயன்படுத்தும்
தற்போதைய செய்திகள்

கூட்டரசு சின்னத்தை கெடா பயன்படுத்தும்

Share:

வரும் தேசிய தினத்தை முன்னிட்டு கூட்டரசு அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்துகின்ற சின்னத்தையும், கருப்பொருளையும் கெடா மாநில அரசாங்கம் பயன்படுத்தும் என்று மாநில மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.

கூட்டரசு அரசாங்கம் வெளியிடும் சின்னத்தையும், சுலோகத்தையும் பயன்படுத்துற்கு ஒப்புக்கொண்டுள்ள கிளந்தான், திரெங்கானு மாநிலத்திற்கு அடுத்து, மூன்றாவது எதிர்க்கட்சி மாநிலமாக கெடா விளங்குகிறது.

பெரிக்காத்தான் நேஷனலின் நான்கு மாநிலங்கள் மெர்டேக்காவையொட்டி சொந்த சின்னத்தையும், சுலோகத்தையும் பயன்படுத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாக அதன் இளைஞர் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி கூறி வந்த வேளையில் இவ்விவகாரத்தில் கெடா மாநிலம் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

Related News