Dec 10, 2025
Thisaigal NewsYouTube
போலீஸ் நிலையங்கள் உட்பட முன்வரிசை சேவைகளில் பொதுமக்களின் ஆடை குறியீட்டிற்கு விலக்களிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

போலீஸ் நிலையங்கள் உட்பட முன்வரிசை சேவைகளில் பொதுமக்களின் ஆடை குறியீட்டிற்கு விலக்களிக்கப்படும்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.10-

போலீஸ் நிலையங்கள் உட்பட பொதுமக்களுக்கு சேவை வழங்கக்கூடிய அரசாங்க முன்வரிசைப் பிரிவில் மக்களின் ஆடை குறியீட்டு முறைக்கு விலக்களிக்கப்படும் என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

அரசாங்க வளாகங்களில் குறிப்பாக பொதுமக்களுக்கு சேவை வழங்கக்கூடிய முன்வரிசை பிரிவில் ஆடை குறியீட்டு முறைக்கு உத்தரவிட்டு இருக்கும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் ஷாம்சுல் அஸ்ரி அபு பாக்கார், 2020 ஆம் ஆண்டுக்கான சுற்றறிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு அமைச்சரவைக் கேட்டுக் கொண்டுள்ள டத்தோ ஃபாமி தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை மலாக்கா, ஜாசின் மாவட்ட போலீஸ் நிலையத்தில் கார் விபத்து தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற பெண் ஒருவர், குட்டைப் பாவடை அணிந்திருக்கிறார் என்பதற்காக அவரின் புகாரை ஏற்க மறுத்து விட்ட போலீசாரின் நடவடிக்கை பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து இந்த விவகாரம் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய விவகாரமாக விவாதிக்கப்பட்டததாக டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.

போலீஸ் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற மக்கள் இன்றியமையாத சேவைகளைப் பெறும் அரசு வளாகங்களில் ஆடை குறியீட்டு முறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள விதிமுறைக்கு இலக்கவில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேற்று கடும் கண்டனம் தெரிவித்தார்.

போலீஸ் நிலையங்களுக்கு வருகின்றவர்களின் புகாரின் தன்மையைதான் போலீசார் ஆராய வேண்டுமே தவிர அவரின் ஆடையில் ஆராய்ச்சி இருக்கக்கூடாது என்றும், இவ்விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டுச் செல்லப் போவதாக கோபிந்த் சிங் அறிவித்து இருந்தார்.

Related News