இரு வாகனங்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட கோர விபத்தில் ஹோன்டா ஜாஸ் காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 4.20 மணியளவில் ஜோகூர், இஸ்கன்டார் புத்தெரி,ஜாலான் இஸ்மாயில் சுல்தான், 6.4 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
இச்சம்பத்தில் அந்த ஹோன்டா ஜாஸ் காரை செலுத்திய மாதுவும், அக்காரில் பயணம் செய்த 19 வயது ஆடவரும் தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக தெரவிக்கப்பட்டது.
அவர்களின் காரை மோதிய 30 வயது மெர்சிடீஸ் பென்ஸ் கார் ஓட்டுநர், போதைப் பொருள் அல்லது மதுபானம் உட்கொண்டுள்ளாரா என்பதை கண்டறிய அவர் ரத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மெர்சிடீஸ் பென்ஸ் கார் எதிர் திசையில் வந்ததாக கூறப்படுகிறது.








