கோலாலம்பூர், ஜனவரி.28-
2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவில், திருத்தங்கள் கொண்டு வருவதற்கான மசோதா, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மசோதாவானது, அதன் இறுதிக் கட்ட ஆய்வில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள உள்துறை அமைச்சர் சைஃபுடின், அமைச்சு, சட்டத்துறை அலுவலகம் மற்றும் போலீசார் அதனை விரிவாக ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தேசியப் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்துவதற்காக, சொஸ்மா சட்டத்தைச் சீர்திருத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் சைஃபுடின் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சொஸ்மா சட்டத்தில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடு குறித்து ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் விளக்கம் கேட்டிருந்தார்.
அதற்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த சைஃபுடின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.








