ஜோகூர் பாரு, ஜனவரி.28-
ஜோகூரில் வட்டி முதலைகளுக்காக தொடர்ச்சியாக வீடுகளுக்கு தீவைத்த இருவர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் அப்துல் ரஹமான் அர்சாட் தெரிவித்துள்ளார்.
25 மற்றும் 26 வயதுடைய அவர்கள் இருவரையும், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி, செகாமாட்டில் உள்ள வீடு ஒன்றில் தீ வைக்க முயன்ற போது போலீசார் கைது செய்துள்ளனர்.
அன்றைய தினம் வழக்கமான சாலைப் பாதுகாப்புச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்ட அந்த இருவரையும் விசாரணை செய்த போது, அவர்களின் சதித் திட்டம் அம்பலமாகியுள்ளது.
அவர்களிடமிருந்து கையெறி குண்டுகள், மிரட்டல் குறிப்பு உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அந்த இருவரும் ஶ்ரீ அலாம், பத்து பஹாட், மூவார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த தீவைப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அப்துல் ரஹமான் அர்சாட் குறிப்பிட்டுள்ளார்.








