கோலாலம்பூர், ஜனவரி.28-
பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிஸி ரம்லி, தனது மகன் மீதான தாக்குதல் குறித்த போலீஸ் விசாரணையில், கிடைக்கப் பெற்ற முக்கியத் தகவல்களை, பொதுவெளியில் பகிரக்கூடாது என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த விவகாரத்தில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி தன்னிடம் பகிரப்பட்ட சில முக்கியத் தகவல்கள் குறித்து பொதுவெளியில் பகிரலாமா? என நாடாளுமன்றத்தில் ரஃபிஸி ரம்லி கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த சைஃபுடின், ரஃபிஸி அந்தத் தகவல்களை பொதுவெளியில் பகிரக்கூடாது என்றும், இந்த வழக்கு விசாரணை குறித்த அனைத்து அதிகாரப்பூர்வத் தகவல்களையும் அமைச்சு மற்றும் போலீசார் மட்டுமே வெளியிட முடியும் என்று தெரிவித்தார்.
அதே வேளையில், ரஃபிஸி மகன் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் சைஃபுடின் உறுதியளித்துள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 13-ம் தேதி, புத்ராஜெயாவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், கருப்பு உடையணிந்த இரு ஆடவர்கள், ரஃபிஸி மகன் மீது மருத்துவ ஊசியால் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.








