ஈப்போ, நவம்பர்.28-
மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு மாணவிகள், சாலையில் சறுக்கி விழுந்ததில் பின்னால் வந்த லோரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இன்று மதியம் 12.07 மணியளவில் ஈப்போ, தாசேக் அருகில் ஜாலான் கோல கங்சாரில் நிகழ்ந்தது.
15 வயதுடைய அந்த இரு மாணவிகள், Klebang- கிலிருந்து ஈப்போவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இரு மாணவிகளும் சம்பவ இடத்திலேலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.








