பக்காத்தான் ராக்யாட்டில் ஓர் உறுப்புக் கட்சியாக இருந்த பாஸ், ஏன் திடீரென்று அந்த கூட்டணியிலிருந்து விலகியது என்பதற்கான உண்மையான காரணத்தை இன்று அம்பலப்படுத்தப் போவதாக விவசாயத்துறை அமைச்சரும், அமானா கட்சியின் தலைவருமான முகமட் சாபு அறிவித்துள்ளார்.
இஸ்லாத்தின் குற்றவியல் சட்டமான ஹுடுட் அமலாக்கத்தை டிஏபி கடுமையாக எதிர்த்து வந்ததால், பக்காத்தான் ராக்யாட் கூட்டணியிலிருந்து தாங்கள் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நீலிக் கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால், அது உண்மையான காரணம் அல்ல என்பதை இன்று வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, பாஸ் கட்சித் தலைவர்களின் முகத்திரையை அகற்றப் போவதாக பாஸ் கட்சியின் முன்னாள் பொறுப்பாளரான முகமட் சாபு குறிப்பிட்டார். பாஸ் கட்சித் தலைவரின் உண்மைக்கு புறம்பான தகவல்களை கேட்டு, இனியும் தாம் சகித்துக்கொள்ள இயலாது என்று முகமட் சாபு சூளுரைத்துள்ளார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


