Oct 16, 2026
Thisaigal NewsYouTube

உயிரை ஒரு விளையாட்டாக கருதுவதாகவும் ஒரு ஆய்வு கூறுவதாகக் குறிப்பிட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உயிரை ஒரு விளையாட்டாக கருதுவதாகவும் ஒரு ஆய்வு கூறுவதாகக் குறிப்பிட்டார்

நாட்டில் நடக்கும் பெரும்பாலான கொலை வழக்குகளில், பாதிக்கப்பட்டவரும் குற்றவாளியும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களாக இருப்பதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு பிரிவு இயக்குநர் Datuk Seri Mohd Shuhaily Mohd Zain தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், சீரற்ற கொலைகள் மிகவும் குறைவாகவே நடப்பதாகவும், இதில் மனித உயிரின் மதிப்பு நிலை குறித்து அவர் கவலை கொள்வதாகவும் கூறினார்.

சமூக ஊடகங்களில் வாழ்க்கையின் மதிப்பைக் குறைத்து மதிப்பிடுவதன் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம். மேலும், இன்றைய தலைமுறையினரிடையே GAMIFICATION எனப்படும் விளையாட்டுத் தன்மை அதிகரித்து வருவதாகவும், அவர் கூறினார். "அமெரிக்காவில் நடந்த பல கொலைகள் குறித்து ஒரு மருத்துவர் என்னிடம் கலந்துரையாடியதை சுட்டிக் காட்டி பேசிய Mohd Shuhaily, இதற்கு காரணம் இளைஞர்களிடம் ஆயுதப் பயன்பாடு இருப்பதாகவும், GAMIFICATION காரணமாக அவர்கள் உயிரை ஒரு விளையாட்டாக கருதுவதாகவும் ஒரு ஆய்வு கூறுவதாகக் குறிப்பிட்டார்.

இந்த குற்றவாளிகளின் சிந்தனை முறையை ஆழமாக ஆராய்வதற்கு உளவியல் வல்லுநர்களின் உதவியை நாடுவதாகவும் அவர் கூறினார். இஃது உண்மையாக இருந்தால், சமூக ஊடகங்களில் உள்ள உள்ளடக்கங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். இது மிகச் சாதாரணமாகக் கருதப்படுகிறது. ஒரு வேளை, இது தொடர்ந்தால், நமது கிழக்கு கலாச்சாரம் பாதிக்கப்படும்" என்றும் Mohd Shuhaily மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →