Jul 10, 2026
Thisaigal NewsYouTube
வாக்காளர்களை அச்சுறுத்தக் கீழ்த்தரமான அரசியல் யுக்தி: ஜசெக வேட்பாளர் சுவரொட்டி விவகாரத்தில் தியோ நி சிங் சாடல்!
தற்போதைய செய்திகள்

வாக்காளர்களை அச்சுறுத்தக் கீழ்த்தரமான அரசியல் யுக்தி: ஜசெக வேட்பாளர் சுவரொட்டி விவகாரத்தில் தியோ நி சிங் சாடல்!

Share:

ஜோகூர் மாநிலத் தேர்தலில் ஜசெக வேட்பாளர்களின் சுவரொட்டிகள் சிதைக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில ஜசெக தலைவர் தியோ நி சிங் எச்சரித்துள்ளார்.

ஜசெக.விற்கு எதிராக தீய நோக்கத்துடன் பரப்பப்படும் பொய் பிரச்சாரங்களையும் அரசியல் சதிகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜசெக வேட்பாளர்களின் புகைப்படங்கள் முக்காடு போடப்பட்டு, தவறான முறையில் மாற்றியமைக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக தியோ குற்றம் சாட்டியுள்ளார்.

மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களை அச்சமூட்டி, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களிப்பதைத் தடுப்பதே இதன் பின்னணியில் உள்ள நோக்கமாகும். இச்செயல் ஆடைக் கலாச்சாரத்தைக் கேலி செய்வதோடு பெண்களுக்கு எதிரான வெறுப்பையும் வெளிப்படுத்துகிறது என்று அவர் முகநூல் வாயிலாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இத்தகைய கீழ்த்தரமான யுக்திகளை நிராகரித்து, ஒற்றுமைக்கும் அமைதிக்கும் வாக்களிக்குமாறு தியோ வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த ஜூன் 1-ஆம் தேதி கலைக்கப்பட்ட 56 தொகுதிகளைக் கொண்ட ஜோகூர் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், வரும் ஜூன் 27 ஆம் தேதியும், வாக்குப்பதிவு ஜூலை 11 ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்