Jul 10, 2026
Thisaigal NewsYouTube
டானாவ் கோத்தா ஏரியில் மீன்கள் மடிந்ததற்குக் தொடர் மழையே காரணம்
தற்போதைய செய்திகள்

டானாவ் கோத்தா ஏரியில் மீன்கள் மடிந்ததற்குக் தொடர் மழையே காரணம்

Share:

கோலாலம்பூர், ஸ்தாபாக், தாமான் டானாவ் கோத்தா ஏரி பூங்காவில் அண்மையில் பெருமளவிலான மீன்கள் மடிந்து மிதந்ததற்குக் தொடர் கனமழையே காரணமாக இருக்கலாம் என கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் விளக்கம் அளித்துள்ளது.

கனமழை காரணமாக ஏரி நீரில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததோடு, வடிகால்களில் இருந்து குப்பைகளும், அசுத்தங்களும் ஏரிக்குள் கலந்ததே இதற்கு காரணம் என ஆரம்பக்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஏரி ஒரு பொழுதுபோக்குத் தலம் மட்டுமல்லாமல், வெள்ளத் தடுப்புக் குளமாகவும் செயல்படுவதால், நகரின் பிற குளங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக டிபிகேஎல் குறிப்பிட்டுள்ளது.

ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகப் பொதுமக்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மடிந்த மீன்கள் உடனடியாக அகற்றப்பட்டு, ஏரிக்குள் குப்பைகள் நுழைவதைத் தடுக்கப் பாதுகாப்பு வலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச்சூழல் துறையினர் ஏரி நீரின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர் என்று டிபிகேஎல் விளக்கம் அளித்துள்ளது.

Related News

கொலைகுற்றச்சாட்டு: மூவரை எதிர்வாதம் புரிய உயர் நீதிமன்றம் உத்தரவு

கொலைகுற்றச்சாட்டு: மூவரை எதிர்வாதம் புரிய உயர் நீதிமன்றம் உத்தரவு

அனைத்து மாநிலங்களிலும் ட்ரோன் பிரிவுகள்: குடிநுழைவுத் துறை அதிரடி திட்டம்!

அனைத்து மாநிலங்களிலும் ட்ரோன் பிரிவுகள்: குடிநுழைவுத் துறை அதிரடி திட்டம்!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை