Jun 17, 2026
Thisaigal NewsYouTube
அவசரப்பட்டு பேச வேண்டாம், நிதானமாக இருங்கள்" - பெர்சத்து கட்சிக்கு அன்வர் மூசா அறிவுறுத்தல்
தற்போதைய செய்திகள்

அவசரப்பட்டு பேச வேண்டாம், நிதானமாக இருங்கள்" - பெர்சத்து கட்சிக்கு அன்வர் மூசா அறிவுறுத்தல்

Share:

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து பெர்சத்து கட்சி அவசரப்பட்டு எந்தவொரு அறிக்கையும் வெளியிட வேண்டாம் என்றும், நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும் அக்கூட்டணியின் தகவல் தொடர்புத் தலைவர் அனுவார் மூசா கேட்டுக்கொண்டுள்ளார்.

அவசரப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று எச்சரித்த அனுவார் மூசா, பல சட்ட அம்சங்களை ஆராய வேண்டியுள்ளதால் அடுத்தடுத்த நடவடிக்கைகள் கவனமாக எடுக்கப்பட வேண்டும் என்றார்.

பாஸ் மற்றும் பெர்சத்து ஆகிய இரு கட்சிகளுமே தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும், முகைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சிக்கு இது போன்ற ஒழுங்குமுறை விவகாரங்களைக் கையாள்வதில் போதிய அனுபவம் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News