Jul 10, 2026
Thisaigal NewsYouTube
தேர்தல் பிரச்சாரத்தில் ஜசெக-வை  எதிரியாக சித்தரிக்க வேண்டாம்: அமானா கட்சி வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் ஜசெக-வை எதிரியாக சித்தரிக்க வேண்டாம்: அமானா கட்சி வலியுறுத்தல்

Share:

ஜோகூர் மாநிலத் தேர்தல் பிரச்சாரங்களின்போது ஜசெகவை கட்சியை எதிரியாகச் சித்தரிக்க வேண்டாம் என அமானா கட்சியின் தேசியத் உதவித் தலைவர் மாஹ்பூஸ் ஒமார் அரசியல் தலைவர்களுக்கு நினைவூட்டியுள்ளார்.

மாநில வளர்ச்சி மற்றும் திட்டங்களுக்காக ஜசெக-வுடன் ஒத்துழைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லாதபோது, தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்கு வங்கிக்காக அவர்களை அச்சுறுத்தலாகக் காட்டுவது தலைவர்களின் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் என்று அவர் விமர்சித்துள்ளார். இத்தகைய 'இரட்டை முக' அரசியல் தற்போதைய சூழலுக்குப் பொருந்தாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் தனித்துப் போட்டியிடும் என்றும், ஜசெக-வுடன் இணைந்து ஆட்சி அமைக்கத் தயாராக இல்லை என்றும் ஜோகூர் மந்திரி பெசார் Onn Hafiz Ghazi கூறியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுத்த போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், கூட்டரசு அரசாங்கத்தில் ஜசெக-வும் அம்னோவும் இணைந்து செயல்படுவதை நினைவூட்டிய நிலையில், மாஹ்பூஸ் ஒமாரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்