மலாக்கா, ஜாலான் சையத் அப்துல் அஜீஸ்ஸில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று மின்தூக்கி 7 மாடியிலிருந்து திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், இரண்டு பராமரிப்பு ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.
27 வயதுடைய அந்த இரு ஊழியர்களும் மின்தூக்கியை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பில் இன்று காலை 11:55 மணியளவில் மலாக்கா தெங்கா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் அவசர அழைப்பைப் பெற்றது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இரு பணியாளர்களையும் சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்டனர்.








