ஏறத்தாழ 6 மில்லியன் வெள்ளி செலவில் சிலாங்கூர் மாநிலத்தில் 790 இடங்களில் எல்.இ.டி. விளக்குகளைப் பொருத்தப்பட்டுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் . இர் இஷாம் ஹாஷிம் கூறினார்.
மின்சார வசதி இல்லாத பகுதிகள், மின்சாரக் கேபிள்கள் அடிக்கடி களவாடப்படுகிற பகுதிகள், விபத்துகள் அதிகம் நிகழ்கின்ற பகுதிகள் ஆகியவற்றில் இந்த பிரகாசமான எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், சிலாங்கூரில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய ஆயிரம் சூரிய சக்தி விளக்குகள் பொருத்தப்படும் என்று தொழில்துறைக்கான முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ டெங் சாங் கிம் கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.








