Jul 29, 2026
Thisaigal NewsYouTube
டீசல் உதவித் தொகை சீரமைப்பிலேயே தற்போதைக்கு கவனம்
தற்போதைய செய்திகள்

டீசல் உதவித் தொகை சீரமைப்பிலேயே தற்போதைக்கு கவனம்

Share:

கோலாலம்பூர், ஜூலை 05-

இலக்கிடப்பட்டவர்களுக்கு மட்டுமே டீசலுக்கான உதவித்தொகையை வழங்கும் நடைமுறை, சீரான நிலையை எட்டுவதோடு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அது அடைவதை உறுதிபடுத்துவதில்தான் தற்போதைக்கு அரசாங்கத்தின் முழ் கவனமும் உள்ளது.

இருப்பினும், ரோன் 95 வகைப் பெட்ரோலுக்கான உதவித்தொகை மறுசீரமைப்பு குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக, பொருளாதார அமைச்சு நேற்று மக்களவையில் வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் கூறியுள்ளது.

டீசல் மூலமாக தொடங்கப்பட்டுள்ள எரிபொருளுக்கான உதவித்தொகை மறுசீரமைப்பு நடவடிக்கை, டீசலை கடத்தும் நடவடிக்கைகளையும் மக்களின் வாழ்க்கை செலவினங்கள் மீதான தாக்கத்தையும் குறைத்து, நாட்டின் பொருளாதாரத்தை உந்த செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, மிச்சப்படுத்தப்படும் 4 பில்லியன் ரிங்கிட் தொகை, பொது சேவைகளின் தரத்தை மேம்படுத்த முடியும் எனவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, தேசிய முன்னணியின் BERA நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சபரி யாகோப், பெட்ரோலுக்கான உதவித்தொகை சீரமைப்பு நடவடிக்கையை அரசாங்கம் எப்போது மேற்கொள்ளும் என கேள்வியை எழுப்பியிருந்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்