Aug 5, 2026
Thisaigal NewsYouTube
கேமரன்மலையில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியப் பிரஜை காணவில்லை
தற்போதைய செய்திகள்

கேமரன்மலையில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியப் பிரஜை காணவில்லை

Share:

நாட்டின் முன்னணி சுற்றுலா மலை வாசஸ்தலமான கேமரன்மலையில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஓர் இந்தியப் பிரஜை கடந்த ஒரு வார காலமாக காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

44 வயது நந்த சுரேஷ் நட்கார்னி என்ற அந்த இந்தியப் பிரஜை கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி கேமரன் மலையில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அன்றைய தினம் தாம் தங்கியிருந்த தானா ராத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலிலிருந்து வெளியேறி காலை 9. 00 மணியளவில் குனோங் ஜாசார் மலைப்பகுதியை நோக்கி மலையேறும் நடவடிக்கையை தொடங்கியதாக கூறப்படுகிறது.

முன்னதாக, அந்த இந்தியப் பிரஜை, கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி அந்த ஹோட்டலில் தன்னை பதிவு செய்து கொண்டு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் செப்டம்பர் 24 ஆம் தேதி அந்த ஹோட்டலை விட்டு வெளியேறுவதற்கு அட்டவணையிடப்பட்டு இருந்தது. ஆனால், ஒரு வார காலமாகியும் அவர் ஹோட்டலுக்கு திரும்பவில்லை. வேறு எங்கும் தங்கியிருப்தற்கான தகவல்களும் இல்லை.

இந்நிலையில் அந்த இந்தியப் பிரஜை காணாதது குறித்து தானா ராத்தா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அவரை தேடும் பணியில் போலீஸ் கலாட் படையினர், தீயணைப்பு,மீட்பு வீரர்கள், பொது தற்காப்பு படையினர் தன்னார்வாலர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

Related News