Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஜெராண்டுட் நகைக் கடை திருட்டு: சௌகிட் பகுதியில் சந்தேக நபர்கள் இருவர் கைது
தற்போதைய செய்திகள்

ஜெராண்டுட் நகைக் கடை திருட்டு: சௌகிட் பகுதியில் சந்தேக நபர்கள் இருவர் கைது

Share:

கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி ஜெராண்டுட் பகுதியில் உள்ள தங்க நகைக் கடையில் நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு ஆண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

23 மற்றும் 63 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் கடந்த திங்கட்கிழமை மாலை 4 மணியளவில், கோலாலம்பூர், சௌ கிட் பகுதியில் உள்ள இரண்டு வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளையில், சம்பவத்தின் போது திருடப்பட்டதாகக் கருதப்படும், சுமார் 26 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய தங்கக் காப்புகள் மற்றும் மோதிரங்களை தற்போது போலீசார் மீட்டுள்ளதாக ஜெராண்டுட் இடைக்கால போலீஸ் தலைவர் அர்ஷாட் அயூப் தெரிவித்துள்ளார்.

மேலும், விசாரணைகளுக்கு உதவும் வகையில், ஒரு இருசக்கர வாகனம், செல்போன், வங்கிக் அட்டைகள் மற்றும் ஆடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வழக்கு, குற்றவியல் சட்டம் பிரிவு 380-இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

மாநிலத் தேர்தலில் போட்டியிட சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஆல்பர்ட் தே விருப்பம்

மாநிலத் தேர்தலில் போட்டியிட சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஆல்பர்ட் தே விருப்பம்