ஜோகூர் பாரு, செப்டம்பர்.23
ஜோகூர் சிங்கப்பூர் இடையிலான குடிநுழைவு சாவடிகளில், MyNIISe என்ற புதிய குடிநுழைவுச் சோதனை முறை ஓட்டம் நேற்று செப்டம்பர் 22 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இச்சோதனை ஓட்டத்தின் போது சில தொழில்நுட்பக் கோளாறுகளும், தாமதங்களும் இருந்த போதிலும், இப்புதிய QR குறியீடு அமைப்பு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக ஜோகூர் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துக் குழுவின் தலைவர் முகமட் ஃபாசில் சாலே தெரிவித்துள்ளார்.
MyNIISe முறையில் இதுவரை 40,000 பயனர்கள் மட்டுமே பதிவுச் செய்துள்ளதாகவும், விரைவில் அதிகமான பயனர்களைச் சென்றடையும் வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோதனைச் சாவடிகளில் இதற்கென பிரத்யேக QR பாதைகள் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றாலும் கூட இச்செயலிகளைப் பயன்படுத்தும் வகையில், சில தனிப்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








