கோலாலம்பூர், டிசம்பர்.03-
வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி, 6 ஆம் தேதி சனிக்கிழமை வரை நாட்டில் பல்வேறு மாநிலங்களில் அடை மழை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியாவின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 5 ஆம் தேதி சபாவில் சண்டாகான், தெலுபிட், கினாபாத்தாங்கான், பெலுரான் மற்றும் கூடாட் ஆகிய பகுதிகளில் அடை மழை தொடங்கும். கிளந்தானில் டிசம்பர் 7 ஆம் தேதி அடை மழை தொடங்கும் வேளையில் ஜோகூரில் டிசம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் அடை மழை பெய்யும்.
குறிப்பாக, செகமாட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாருவில் மழை நீடிக்கும் என்று ஆருடம் கூறப்பட்டுள்ளதாக டாக்டர் முகமட் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.








