ஈப்போ, ஜனவரி.23-
ஈப்போவில் உள்ள ஒரு பங்களா வீட்டில் கடந்த வாரம் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 37.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பன்னாட்டு கும்பல் ஒன்றால் நடத்தப்பட்ட இந்த போதைப்பொருள் கிடங்கில் 843 கிலோ methamphetamine மற்றும் 618 கிலோ Ecstasy ரக போதைப் பொருட்களைப் கண்டெடுக்கப்பட்டன.
இந்தக் கும்பல் மலேசியாவை போதைப் பொருள் தயாரிப்பு மற்றும் விநியோக மையமாகப் பயன்படுத்தி, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு போதைப் பொருட்களை அனுப்பி வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் துடைத் தொழிப்பு பிரிவின் இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
இன்று ஈப்போவில் பேரா மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் டத்தோ ஹுசேன் ஓமார் இதனைக் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர். இந்தக் கும்பலின் தலைவரைப் பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பங்களா வீடு சட்டவிரோத போதைப் பொருள் தயாரிப்புக் கூடமாக மாற்றப்படவிருந்த நிலையில், போலீசார் சரியான நேரத்தில் செயல்பட்டு அதனைத் தடுத்துள்ளனர் என்று டத்தோ ஹுசேன் ஓமார் விளக்கினார்.








